"புது பைக் வாங்க, குழந்தையை வித்துட்டேன்" பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு, பெற்றோர் செய்த காரியம்..
ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மு பெஹ்ரா. இவருக்கு 2 மனைவிகள் உள்ள நிலையில், இவரது முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும், இவரது இரண்டாவது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், தர்மு பெஹ்ராவுக்கு தனது இரண்டாவது மனைவியின் குழந்தையை வளர்ப்பதில் விருப்பம் இல்லை. இதனால், அவர் பிறந்து பத்து நாட்களே ஆன தனது ஆண் குழந்தையை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்துள்ளார்.
பின்னர், குழந்தையை விற்றதில் வந்த பணத்தை வைத்து புதிதாக பைக் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், தான் புதிதாக வாங்கிய பைக்கில் தனது குடும்பத்துடன் சுற்றி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள், சம்பவம் குறித்து குழந்தைகள் நல குழுவிடம் புகார் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தையின் தந்தை புது பைக் வாங்க தனது குழந்தையை விற்றது உறுதியானது. இதையடுத்து, போலீசார் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், தர்முவையும், குழந்தையின் தாயான இரண்டாவது மனைவியையும் விசாரித்து வருகின்றனர்.
Read more: நெஞ்சை ரணமாக்கும் கொடூர சம்பவம்.. பள்ளி வாசலில் நின்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்..