குளித்துக் கொண்டிருந்த கொழுந்தியா.. நேரில் பார்த்த உடன் வாலிபர் செய்த காரியம்..
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பூபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் 30 வயதான சதீஷ். கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவியின் சகோதரி கணவனை இழந்த நிலையில், ஜோலார்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கொழுந்தியா மீது அதிக பாசம் கொண்ட சதீஷ், அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். வழக்கம் போல், நேற்று காலை சதீஷ் அவரது கொழுந்தியா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது கொழுந்தியா குளித்துக் கொண்டிருந்துள்ளார்.
இத்தனை பார்த்த சதீஷுக்கு அவர் மீது ஆசை ஏற்படவே, சதீஷ் உடனே தனது செல்போனை எடுத்து, அவருக்கு தெரியாமலேயே வீடியோ எடுக்க முயன்றுள்ளார். இதனை கவனித்த அவரது கொழுந்தியா கூச்சலிட்டுள்ளார். இதனால் பதறிய சதீஷ், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் இது குறித்து அந்தப் பெண் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக சதீஷ் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவரது செல்போனில் பல பெண்களின் குளியல் வீடியோ இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.