2 வருடம்...! சொந்த மகளையே கற்பழித்த கொடூர தந்தை.! நாட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்.!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தந்தை தனது மகளை தொடர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொடூர தந்தையை கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பக்தி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் தனது இளைய மகளை மிரட்டி கடந்த இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்வு செய்து வந்திருக்கிறார். மேலும் இதனை தாயிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் பயமுறுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் தந்தையின் கொடுமை தாங்காத சிறுமி நடந்த சம்பவங்களை தாயிடம் கூறி அழுது இருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற மகளையே தந்தை இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வெளியில் தான் பாதுகாப்பு இல்லை என்றால் குழந்தையின் தந்தையே இது போன்ற ஒரு கொடிய சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.