“அப்பா எனக்கு வலிக்குது, என்ன விடு” கதறி துடித்த 5 வயது மகள்; போதையில் தந்தை செய்த கொடூரம்…
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே உள்ளது. அதுவும் பொதுவெளியில் மட்டும் இல்லை. பெண்கள் தங்களின் சொந்த வீடுகளில் தனது சொந்த உறவினர்களால் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அப்படி ஒரு கோர சம்பவம் தான் 5 வயது சிறுமிக்கு நடந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி கேரள மாநிலம், பத்தினம்திட்டாவில், 5 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்புகள், முகம் உட்பட உடல் முழுக்க 67 காயங்கள் இருந்தது. வீட்டு வேலைக்கு சென்ற தாய் தனது மகள் பல காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், சிறுமியின் சடலத்திற்கு அருகில், அப்பெண்ணின் இரண்டாவது கணவர் போதையில் படுத்திருந்துள்ளார். அப்போது தான், அந்த தாய்க்கு தனது மகள் தனது இரண்டாவது கணவரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் கதறி துடித்த அவர், சமபவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பெண்ணின் இரண்டாவது கணவரான, ராஜபாளையத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் போலீசார் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை பத்தனம்திட்டா அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன் படி, 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வளர்ப்பு தந்தைக்கு, மரண தண்டனை விதித்து பத்தனம்திட்டா கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெயக்குமார் ஜான் தீர்ப்பு அளித்துள்ளார்.
Read more: சம்பளம் இல்லாமல், ஆடு மேய்க்கும் பிரபல நடிகரின் மகன்.. மகன் குறித்து மனம் விட்டு பேசிய தாய்..