கடப்பாறையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மகன்.! தந்தை மச்சான் கைது.! விசாரணையில் வெளியான பகீர் உண்மை.!
தர்மபுரி மாவட்டத்தில் தந்தையால் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தந்தை மற்றும் உறவினரை கைது செய்துள்ளனர் .
தர்மபுரி மாவட்டம் தடங்கம் பள்ளி அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த உடலை கைப்பற்றி அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த நபர் ஓட்டப்பட்டியைச் சேர்ந்த ஜெயவேல் என்று தெரியவந்தது.
மேலும் ஜெயவேலின் கொலை தொடர்பாக அவரது தந்தை மற்றும் அக்காள் கணவர் திருப்பதி ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகியிருக்கிறது. மது பழக்கத்திற்கு அடிமையான ஜெயவேல் மது குடித்துவிட்டு வந்து தனது தாய் மற்றும் தந்தையை அடிக்கடி தொந்தரவு செய்து இருக்கிறார். மேலும் பணம் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் விரட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை கோவிந்தசாமி கடப்பாரையால் தாக்கியதில் ஜெயவேல் மரணம் அடைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து திருப்பதி உதவியுடன் அவரது சடலத்தை மறைக்கும் என்ற சம்பவம் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தந்தையால் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.