For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"புருஷன் நா இருக்கும் போது, உனக்கு இத்தன கள்ளக்காதலனா?" போலீசாரையே மிரள வைத்த போன் கால்..

man-killed-his-wife
06:49 PM Dec 07, 2024 IST | Saranya
 புருஷன் நா இருக்கும் போது  உனக்கு இத்தன கள்ளக்காதலனா   போலீசாரையே மிரள வைத்த போன் கால்
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் தாய்மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கோபால் ராஜ். காயலாங்கடை நடத்தி வரும் இவருக்கும், 26 வயதான பரமேஸ்வரி என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. இந்த தம்பதிக்கு 8 மற்றும் ஆறு வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று கோபால் ராஜ் தனது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு போன் செய்து அவரே தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், செல்பேனிலேயே அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

Advertisement

அப்போது அவர், தனது மனைவி பரமேஸ்வரி பலருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், இத்தனை பலமுறை கண்டித்தும் அவர் மாறாததால் தனது கைகளால் மனைவி பரமேஸ்வரியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், கொலை செய்த பின்னர் தனது இரு மகள்களையும் திருநின்றவூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு காவல் நிலையத்தில் வந்து சரணடைவதாகவும் கூறியுள்ளார். ஆனால் கூறியப்படி, கோபால் ராஜ் காவல் நிலையத்துக்கு வராமல் தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர்
பரமேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கோபால் ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Read more: மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…

Tags :
Advertisement