"உன்னால ஒரு ஆம்பள புள்ள பெக்க முடியாதா?" ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல்..
மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குண்டலிக் உத்தம் காலே. இவருக்கு மைனா குண்டலிக் காலே என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மைனா குண்டலிக் காலே மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது, குண்டலிக் உத்தம் காலே தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நம்பியுள்ளார். ஆனால் மைனாவிற்கு மூன்றாவதும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த குண்டலிக் உத்தம் காலே, தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மிகுந்த கோவமடைந்த உத்தம் காலே தனது மனைவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதனால் மைனா கதறி துடித்துள்ளார். மைனாவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மைனாவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் மைனாவை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மைனாவை தீக்காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பே பரிதாபமாக உயிரிழந்தார். 2 குழந்தைகள் அனாதையை நிற்கும் நிலையில், பிறந்த பச்சிளம் குழந்தை பசியில் துடித்த சம்பவம் கண் கலங்க செய்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த மைனாவின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: தமிழகமே…! வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கப்படும்…! தமிழக அரசு அறிவிப்பு