முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"எனக்கு அம்மா வேணும் பா" கதறி துடித்த 4 வயது சிறுவன்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

man killed his wife and mother-in-law
07:57 PM Nov 06, 2024 IST | Saranya
Advertisement

கேரளா மாநிலம் கோட்டயம் அருகே மரவந்துருத்து கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான நிதிஷ். இவருக்கு 35 வயதான சிவப்பிரியா என்ற மனைவியும், 4 வயதான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. திருமணமான நாளில் இருந்து கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போடுவது உண்டு. அப்படி சண்டை வரும் போதெல்லாம், அவர்கள் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு மாறி மாறி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளனா். இந்நிலையில், வழக்கம் போல் கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்ட மனைவி சிவப்பிரியா தனது குழந்தையுடன் அவரது தாய் கீதா வீட்டிற்கு சென்றுவிட்டார்.

Advertisement

வீட்டில் தனியாக வசித்து வந்த நிதிஷ், தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்கு அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சிவப்பிரியா, அவருடன் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நிதிஷ், தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றியதில், நிதிஷ் தனது மனைவியை வெட்டியுள்ளார். மேலும், அதனை தடுக்க வந்த அவரது மாமியாரையும் துண்டு, துண்டாக வெட்டியுள்ளார். இதில் அவரது மனைவி மற்றும் மாமியார் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனா்.

இதையடுத்து நிதிஷ், தனது குழந்தையை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினருக்கு நிதிஷ் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டதால், உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்க்கிடையில், நிதிஷ், தனது குழந்தையை தனது வீட்டில் தனியாக விட்டுவிட்டு, காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து சிவப்பிரியா மற்றும் கீதா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார் நிதிஷை கைது செய்தனா். இவர்களின் குடும்ப சண்டையில், எதுவும் அறியாத சிறுவனுக்கு அம்மா, அப்பா, பாட்டி என யாரும் இல்லாமல் அனாதையாய் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read More : கைகளில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க முடியாதா..? தீயாய் பரவும் தகவல் உண்மையா..?

Tags :
Keralamother in lawmurderpolice stationson
Advertisement
Next Article