For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெற்றோர்களே கவனம்!! நல்லவன் போல் நடித்து, இளைஞன் செய்த காரியத்தால் கதறும் குடும்பம்..

man-fooled-4-women-in-the-name-of-love
07:03 PM Dec 08, 2024 IST | Saranya
பெற்றோர்களே கவனம்   நல்லவன் போல் நடித்து  இளைஞன் செய்த காரியத்தால் கதறும் குடும்பம்
Advertisement

நாகர்கோவிலைச் சேர்ந்தவர், 27 வயதான லிஜீன். இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் போன் தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடன், கடலூர் மாவட்டம் வள்ளி மதுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பிரியதர்ஷினி என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரிமுனையில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில், இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஒரு சில மாதங்களில், பிரியதர்ஷினி கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் லிஜீன் அவருக்கு மாத்திரை வாங்கிக் கொடுத்து வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்துள்ளார்.

Advertisement

ஒரு கட்டத்தில், திருமணத்திற்கு தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருவதாகக் கூறிச் சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி, இதுகுறித்து தண்டையார் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், பெற்றோர் சம்மதத்துடன் லிஜீனுக்கு, நான்சி பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரியதர்ஷினி, திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்று தனக்கு நியாயம் கேட்டுப் போராடியுள்ளார். ஆனால், போலீசார் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், திருமணமான மூன்று நாட்களிலேயே, புதுப்பெண் நான்சி பிரியங்காவுக்கு தனது கணவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, தனது கணவனின் செல்போனை எடுத்து அவர் சோதனை செய்த போது, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் பல பெண்களுடன், லிஜீன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், பிரியதர்ஷினிக்கு முன்பே இரு பெண்களை லிஜீன் ஏமாற்றியதை அறிந்து, பெண் வீட்டார் அனைவரும் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு காரைக்காலைச் சேர்ந்த பெண்ணை காதலித்து, கர்ப்பமாக்கி ஏமாற்றியது தெரியவந்தது.

பின்னர் 2022 ஆம் ஆண்டு. தென்காசியைச் சேர்ந்த பெண் ஒருவரையும். கடைசியாக பிரியதர்ஷினியை ஏமாற்றியாதும் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த நான்சி பிரியங்கா, இதுகுறித்து லிஜீனிடம் கேட்க முயற்சித்த போது, அவர் வீட்டை விட்டு வெளியேறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, அவர் தனது கணவன், அவரது தந்தை லிசான் கிறிஸ்டோபர், தாய் விமலா ராணி ஆகியோர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த லிஜீனைக் கைது செய்தனர். மேலும், அவர் மீது, ஏமாற்றுதல், வரதட்சணை கொடுமை உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே தன்னைத் திருமணம் செய்து லிஜீன் ஏமாற்றியதாக பிரியதர்ஷி புகார் அளித்த போதே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், 4-வது பெண்ணின் வாழ்க்கையாவது காப்பாற்றப்பட்டிருக்கும் என்று உறவினர்கள் புலம்புகின்றனர்.

Read more: உங்க வீட்டு பெண் பிள்ளைகளுக்கு பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கா? அப்போ உடனே இதை செய்யுங்க..

Tags :
Advertisement