கள்ளக்காதலனுடன் காரில் சென்ற மனைவி.. 5 கிலோ மீட்டர் தூரம் கணவனை இழுத்துச்சென்ற அவலம்..!! பகீர் வீடியோ
உத்தர பிரதேசத்தில் மனைவி தனது கள்ளக்காதலனுடன் காரில் செல்வதை பார்த்த கணவன், உடனே பிடிக்க முயன்று, காரின் முன்பகுதியில் ஏறினார். இதையடுத்து காரை நிறுத்தாமல் அவரது மனைவியும், கள்ளக்காதலனும் சில கிலோமீட்டர் ஓட்டி சென்றனர். கணவன் ஆபத்தான முறையில் காரின் முன்பகுதியில் தொங்கியபடி நின்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பிட்ட தூரம் சென்ற நிலையில் பிற வாகனத்தில் பயணித்தவர்கள் அந்த காரை நிறுத்தினர். பின்னர் உடனடியாக கீழே இறங்கிய நபர் காரை ஓட்டிய நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அந்த சாலையில் செல்வோர் தங்களின் செல்போனில் வீடியோ எடுக்கின்றனர். அந்த வீடியா தான் தற்போது பரவி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கார் ஓட்டிய நஸ்ரூல் ஹசன் என்ற நபரை கைது செய்துள்ளனர். வேகமாக கார் ஓட்டியது, உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் போக்குவரத்து விதியை மீறி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தர பிரதேச மொரடாபாத் அருகே மொரடாபாத் - ஆக்ரா சாலையில் நடந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், காரின் முன்பகுதியில் தொங்கியபடி நின்ற நபரின் பெயர் முகமது சமீர். முகமது சமீரின் மனைவி பெயர் நூர் அப்ஸா. இவருக்கும் நஸ்ரூல் ஹசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதையடுத்து மனைவி நூர் அப்ஸா தனது கள்ளக்காதலன் நஸ்ரூல் ஹசன் உடன் காரில் அமர்ந்துள்ளார்.
இதை பார்த்து ஷாக்கான நூர் அப்ஸா கார் அருகே சென்றுள்ளார். அப்போது நஸ்ரூல் ஹசன் திடீரென்று காரில் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் நூர் முகமது சமீர் விடவில்லை. அவரது காரின் முன்பகுதியில் உள்ள இரும்பு கம்பியில் ஏறி காரை நிறுத்த முயன்றார். ஆனால் நஸ்ரூல் ஹசன் காரை நிறுத்தாமல் மொரடாபாத் - ஆக்ரா ரோட்டில் சென்றார். இதனால் முகமது சமீர் காரின் முன்பகுதியை பிடித்தபடி அப்படியே நின்றுள்ளதும், அதன்பிறகு பிற வாகன ஓட்டிகளின் உதவியுடன் தனது மனைவியின் கள்ளக்காதல் நஸ்ரூல் ஹசனை பிடித்ததும் தெரியவந்துள்ளது.
Read more : பில்லா படத்தை ஃப்ளாப் என்று கூறிய இயக்குனர்.. ரஜினியின் மேனேஜர் கொடுத்த தரமான பதிலடி…