For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இளம்பெண் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்; தூக்கிட்டு தற்கொலை செய்த காதலன்..

man-committed-suicide-after-seeing-his-lovers-status
06:03 PM Dec 08, 2024 IST | Saranya
இளம்பெண் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்  தூக்கிட்டு தற்கொலை செய்த காதலன்
Advertisement

சென்னை கொருக்குப்பேட்டைமீனம்பாள் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் 24 வயதான பிரேம்குமார். சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர் வசித்து வரும் அதே பகுதியில், தனது கணவரை விட்டு பிரிந்து வாழும் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், பிரேம் குமாருக்கும் அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, பிரேம்குமார் தனது காதலி தனது கணவரிடம் விவாகரத்து பெற்ற பிறகு, தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஆசையில் இருந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில் அந்த பெண், தான் வேறொரு இளைஞருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தனது 'வாட்ஸ்அப் ஸ்டேட்டசில்' வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார், இது குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர், நான் அவரைதான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறியுள்ளார். மேலும், பிரேம்குமாரின் செல்போன் அழைப்பையும் எடுக்க மறுத்துவிட்டார். இதனால் விரக்தி அடைந்த பிரேம்குமார், வாட்ஸ் அப் ஸ்டேட்டசில்' தனது தற்கொலைக்கு காரணம் அந்த பெண் தான் என அவரது செல்போன் எண்ணை பதிவு செய்து வைத்து விட்டு, நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சென்னை ஆர்.கே. நகர் போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more: ரேஷன் அரிசி சாப்பிட்டால் இந்த நோய்கள் வராது… இனி வேஸ்ட் பண்ணாதீங்க..

Tags :
Advertisement