MAMTA BANERJEE "அக்கா இல்ல அவங்க ஆன்ட்டி"- பாஜக தலைவரின் சர்ச்சைக்குரிய கருத்து.!
மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை(Mamta Banerjee) பற்றி பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கூறிய கருத்துக்கள் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவை தலைவர் மம்தா பானர்ஜியை ஆன்ட்டி என்று அழையுங்கள் என தெரிவித்திருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜியை(Mamta Banerjee) இனி திதி என்று அழைக்காதீர்கள் என தெரிவித்திருக்கிறார். தற்போது அவர் ஆன்ட்டி ஆகிவிட்டார். அதனால் அவரை ஆன்ட்டி என்றே அழையுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
2021 ஆம் வருடம் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியை 1736 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி தோற்கடித்தார். அதற்காக மம்தா பானர்ஜி, சுவேந்து அதிகாரி மீது 42 வழக்குகளை பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் மேற்குவங்க மாநிலத்தின் சந்தேஷ்காலி பகுதியில் நடைபெற்று வரும் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மம்தா பானர்ஜியின் சர்வதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை வடகொரியா அதிபர் கிம் ஜாங்குடன் ஒப்பிட்டு சர்வாதிகாரியாக சித்தரித்துள்ளார். கம்யூனிஸ்டுகள் இடதுசாரிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் என அனைவரும் மேற்கு வங்காளத்தை சிதைத்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் மம்தா பானர்ஜி பங்களாதேஷ் நாட்டின் குரலாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.