Hema Committee Report | தண்டனை கிடைக்க வேண்டும்.. இதுபோன்ற விஷயங்கள் நடக்கும் களம் சினிமா அல்ல..!! - மெளனம் கலைத்த மம்முட்டி
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை தற்போது வெளியாகி பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகர் மம்முட்டி மெளனம் கலைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகதள பக்கத்தில், "ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன். திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் கைகோர்த்து அவற்றை செயல்படுத்த வேண்டிய நேரம் இது. தற்போது எழுந்துள்ள புகார்கள் மீது போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாளத் திரையுலகில் பரவி வரும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை வெளிக்கொண்டு வந்தது, மேலும் அந்தத் துறையில் சக்திவாய்ந்த பதவியில் இருப்பவர்கள் பெண் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை எப்படித் தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள் என்பதையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது என்றார்.
மம்முட்டி மேலும் குறிப்பிடுகையில், "நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தில் உள்ளது. காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை தீர்மானிக்கட்டும். சினிமாவில் 'பவர்ஹவுஸ்' இல்லை. சினிமா என்பது இதுபோன்ற விஷயங்கள் நடக்கும் களம் அல்ல. ஹேமா கமிட்டி அறிக்கையின் நடைமுறைப் பரிந்துரைகள் சட்டத் தடைகள் இருந்தால் கண்டிப்பாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
Read more ; ரொம்ப கஷ்டமா இருக்கு..!! பாலியல் தொல்லையை விட பொய் குற்றசாட்டு வேதனையானது..!! – மலையாள நடிகர் ஜெயசூர்யா