For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

 மாமியாருடன் காதல்! உறவுக்கு அழைக்கும் மருமகளாள் அதிர்ச்சி!

10:01 AM Apr 29, 2024 IST | shyamala
 மாமியாருடன் காதல்  உறவுக்கு அழைக்கும் மருமகளாள் அதிர்ச்சி
Advertisement

உ.பி.யில் மாமியாருடன் சேர்ந்து வாழவேண்டும் என மருமகள் விரும்புவதாக விபரீதமான கதை குறித்து தற்போது பார்ப்போம்...

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியின் சயனா என்ற இடத்தில் இந்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது. பெண் ஒருவர் தனது மருமகளிடம் இருந்து தன்னை மீட்க காவல் கண்காணிப்பாளர்யிடம் முறையிட்டுள்ளார். அவர் தனது மருமகள் தன்னை காதலிப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அவர் அளித்த மனுவில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தன் மகனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தோம். இருப்பினும், எங்கள் மருமகள் வீட்டிற்குள் வந்த பிறகு, என்னிடம் காதலை வெளிப்படுத்தினாள்.  மேலும், அவள் உடல் ரீதியாகவும் தன்னை வலியுறுத்துகிறாள். எனது மருமகள் மகனுடன் வாழ மறுத்துவிட்டார் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மாமியார், “என்னைப் பார்த்தது முதல், தன் இதயத்தை எனக்காக அர்ப்பணித்ததாகக் தனது மருமகள் கூறிக்கொள்கிறார் என்று வேதனை தெரிவித்துள்ளார். எனது மகனுடன் திருமணம் நடந்தது வெறும் சாக்குப்போக்கு என்றும், என்னுடன் அவள் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்பதே அவரது உண்மையான விருப்பம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மருமகள் என்னை கணவருடன் வாழ மறுப்பு தெரிவித்து, நான் அவளுடைய சொத்து என்று கூறுகிறாள் என கவலையுடன் தெரிவித்துள்ளார் மாமியார். இது குறித்து அவரது மகன் கூறும்போது, இந்த நிலைமை முழு குடும்பத்தையும் பாதித்துள்ளது என்றும் எங்கள் திருமண பந்தத்தில் என் மனைவி விருப்பமின்மையை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் கூறினார். அவளின் எண்ணங்களுக்கு எங்களது ஆட்சேபனைகள் இருக்கும் போதிலும், அவள் தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள் என்ற அவர், என் அம்மாவைப் பிரிவதைவிட மரணத்தையே விரும்புவதாக தனது மனைவி கூறுவதாக தெரிவித்துள்ளார்.

தனது மாமியாரை காதலிக்கும் அப்பெண், கணவரிடம் இருந்து பிரிய விவாகரத்து கேட்டும் முறையிட்டது மட்டுமின்றி, தனது மாமியாருடன் சேர்ந்து வாழவும் அவர் ஆசைப்படுகிறார். அதேபோல, குடும்ப சூழ்நிலையை காட்டி, விவகாரத்தால் 20 லட்ச ரூபாயும் அவர் கோரியுள்ளார்.

எச்சரிக்கை.!! Vitamin D குறைபாட்டால் அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்.!! இயற்கை முறையில் தவிர்ப்பது எப்படி.?

Tags :
Advertisement