மம்தா பேசுகையில் மைக் ஆஃப்..!! நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த மேற்கு வங்க முதலமைச்சர்!! நடந்தது என்ன?
நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும் பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தார்.
நிதி ஆயாக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "நான் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டேன். சந்திரபாபு நாயுடு பேச 20 நிமிடம் வழங்கப்பட்டது. அசாம், கோவா, சத்தீஸ்கர் முதல்வர்கள் 10-12 நிமிடங்கள் பேசினார்கள். ஆனால் நான் பேச இடம் கொடுக்கவில்லை. மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கப்படவில்லை என்று நான் பேசிக்கொண்டிருந்தேன், அப்போதுதான் அவர்கள் எனது மைக்கை ஆஃப் செய்தனர்" என்று பானர்ஜி கூறினார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை அனைத்து பிராந்திய கட்சிகளுக்கும் அவமானம் என பானர்ஜி குற்றம் சாட்டினார். மை ஆஃப் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏன் என்னைத் தடுத்தீர்கள், ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள்? எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து, நான் மட்டுமே இங்கு பிரதிநிதித்துவம் செய்கிறேன், கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற அதிக ஆர்வத்தின் காரணமாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறேன்," எனக் கூறி கொந்தளித்தார்.. இருப்பினும், அரசு வட்டாரங்கள் அவரது கூற்றை மறுத்து, அவர் பேசும் நேரம் முடிந்துவிட்டதாகவும், மதிய உணவுக்குப் பிறகு அவரை மீண்டும் பேச அனுமதிப்பதாக கூறினார்.