இன்னும் 7 நாட்கள் தான்.. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..!! - மம்தா அதிரடி
மேற்கு வங்க மாநிலத்தில் பலாத்கார குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளும் அரசாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது இன்றைய தினத்தை (ஆகஸ்ட் 28) ஆண்டுதோறும், சத்ர பரிஷத் ( கட்சியின் மாணவர் அமைப்பு) தினமாக கொண்டாடி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சத்ர பரிஷத் தினத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொண்டாடவில்லை. திரிணமூல் காங்கிரஸ் நிறுவப்பட்ட தினத்தை ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவிக்கு அர்ப்பணிப்பதாக அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு நிறுவன நாள் நிகழ்ச்சியில் முதல்வர் பானர்ஜி பங்கேற்றார். அப்போது பேசிய மமதா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளானவருக்கான நாளாக அர்ப்பணிக்கிறோம்.
மேற்கு வங்க மாநில சட்டசபையில் அடுத்த வாரம் பலாத்கார குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் மரண தண்டனை விதிக்கை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும். அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 31-ந் தேதி மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கோரி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். அதில் தாமும் பங்கேற்பேன் என அறிவித்தார்.
Read more ; கிருஷ்ணகிரி விவகாரம்.. என்ன நடவடிக்கை எடுத்தீங்க..!! – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி