முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மல்லையா, நீரவ் மோடி நாடு கடத்தப்படுவார்கள்!. பிரதமர் மோடி அதிரடி!

Mallya, Nirav Modi will be deported! Prime Minister Modi action!
07:36 AM Nov 20, 2024 IST | Kokila
Advertisement

PM Modi: தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரை நாடு கடத்துவதில் விரைவான நடவடிக்கை எடுக்கும்படி, பிரிட்டன் பிரதமரிடம், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

ஜி - 20 அமைப்பின் உச்சி மாநாடு, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடக்கிறது. இதில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை நேற்று சந்தித்தார். கடந்த ஜூலையில் நடந்த தேர்தலில் வென்று பிரதமரான பின், கெய்ர் ஸ்டாமருடன் பிரதமர் மோடியின் முதல் சந்திப்பு இது.

இந்த சந்திப்பின்போது, தாராள வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர். கடந்த, 2022 ஜனவரியில் துவங்கி, 14 சுற்றுகள் பேச்சு நடந்துள்ளது. இருப்பினும் சில விஷயங்களில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. வரும் புத்தாண்டு துவக்கத்தில் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, தாராள வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கி, 9,-000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது வழக்குகள் உள்ளன. இதைத் தொடர்ந்து, 2016ல் அவர் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அதுபோல் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளாக, லண்டன் சிறையில் உள்ளார்.

இந்த இருவரையும் நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பிரிட்டன் பிரதமருடனான சந்திப்பின்போது, இந்த இருவரையும் உடனடியாக நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி, பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Readmore: ஐயப்ப பக்தர்களே!. தினசரி ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 80 ஆயிரமாக உயர்த்தப்படும்!. தேவசம் போர்டு!

Tags :
deportedMallyaNirav ModiPrime Minister Modi
Advertisement
Next Article