முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"என்னடா உருட்டு புதுசா இருக்கே.." பிரதமருக்கு விமர்சனம்.! வெளியுறவு துறை அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்தா.?

05:18 PM Jan 09, 2024 IST | 1newsnationuser7
Advertisement

பிரதமர் நரேந்திர மோடியை சமூக வலைதளங்களில் கேலி செய்த மாலத்தீவு அரசியல்வாதி இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடி இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கரைகளின் அழகு மற்றும் பவளப்பாறைகள் பற்றியும் லட்சத்தீவின் சுற்றுலா சிறப்பம்சங்கள் பற்றியும் தனது எக்ஸ் வலைதளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்திருந்தார்

Advertisement

இந்நிலையில் மாலத்தீவின் அரசியல்வாதி ரமீஸ் மற்றும் மாலத்தீவு இணையமைச்சரான மரியம் ஷியூனா ஆகியோர் இந்தியா பற்றியும் லட்சத்தீவு பற்றியும் அவதூறு கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர். மேலும் இந்திய விடுதிகளின் தரம் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதற்கு எழுந்த பலத்த எதிர்ப்பைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து இருந்தார்.

அந்த வாழ்த்தில் " மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய தேசத்திற்காக உங்களது அர்ப்பணிப்பும் பங்களிப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த பிறந்தநாளில் உங்களுக்கு வாழ்த்துக்களும் வெற்றிகளும் உறுதியாகட்டும்" என பதிவு செய்திருந்தார். இந்த பதிவிற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் மாலத்தீவின் அரசியல்வாதியான ஷஹீத் ரமீஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக பதிவிட்டு இருக்கும் அவர் " இந்தியாவின் மதிப்பிற்குரிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இந்தப் பிறந்தநாளில் மகிழ்ச்சியும் வெற்றியும் உங்களுக்கு உரித்தாகட்டும். மேலும் தங்களது நேர்மறையான ராஜதந்திர நடவடிக்கைகள் தொடரட்டும்" என பதிவு செய்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பிரதமரை விமர்சித்த நிலையில் இன்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
birthday wishCritics On PMExternal Ministerindiamaldives
Advertisement
Next Article