முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

MUIZZU | மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மீது ஊழல் குற்றச்சாட்டு.!! சமூக வலைதளத்தில் லீக்கான அறிக்கை.!!

05:32 PM Apr 18, 2024 IST | Mohisha
Advertisement

Muizzu: மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் தன்னை குற்றச்சாட்டுகளில் சிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவர் மீது எந்த தவறையும் காட்ட முடியாது எனக் கூறியிருக்கிறார்.

Advertisement

மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் அந்நாட்டின் அதிபர் முகமது  முய்ஸு வீடு 2018 ஆம் ஆண்டு முதல் வெளியான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து விசாரணை மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளன.

மஜ்லிஸிற்கான தேர்தல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் முய்ஸுவின்(Muizzu) மக்கள் தேசிய காங்கிரஸ் ஆகியவை மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. இதனால் மாலத்தீவு பொதுமக்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர் . கடந்த திங்கட்கிழமை அன்று ஹாசன் குருசி என்பவருடைய X சமூக வலைதள பக்கத்தில் அதிபர் முகமது முய்ஸுவை ஊழலுடன் தொடர்புபடுத்திய மாலத்தீவு நாணய ஆணையம் மற்றும் மாலத்தீவு போலீஸ் சேவையின் நிதிப் புலனாய்வுப் பிரிவு தயாரித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மாலத்தீவு அரசியலில் கடும் புயல் நிலவுவதாக மாலத்தீவு பத்திரிகைகள் தெரிவித்து இருக்கிறது.

சுமார் 2018 தேதியிட்ட இந்த அறிக்கைகள், ஜனாதிபதி முய்ஸுவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் இருப்பதை காட்டுகிறது. இந்த அறிக்கையில் நிதி முறை கேடு தொடர்பாக 10 முக்கியமான கருத்துக்களை எடுத்துக்காட்டுகிறது. அரசியல் ரீதியாக வெளிப்படுத்தப்பட்ட நபர்களுடன் தொடர்பு, மோசடி, கட்டமைக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மற்றும் நிதி மூலத்தை மறைக்க கார்ப்பரேட் நிறுவனங்களைப் பயன்படுத்தியது போன்றவை அடங்கி இருப்பதாக மாலத்தீவு குடியரசு என்ற செய்தியை இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் சமூக வலைதளங்களில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. பல்வேறு சமூக வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. எனினும் அவை எச்சரிக்கையுடனே செயல்படுகின்றன. எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) மற்றும் மக்கள் தேசிய முன்னணி (பிஎன்எஃப்) இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரின

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த அதிபர் முய்ஸு நான் மேயர் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போதும் என் மீது இதே போன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அப்போது நான் கூறிய பதிலையே இப்போதும் கூறுகிறேன். இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்பு என் மீது புனைய முயற்சித்தீர்கள் அப்போது முடியவில்லை. இப்போதும் உங்களால் முடியாது. இந்த குற்றச்சாட்டுகளை நீங்கள் எவ்வளவு தூரம் எடுத்துச் சென்றாலும் எனக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

Read More: Gpay மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அண்ணாமலை..!! அரசியலில் பரபரப்பு..!!

Tags :
Corruption AllegationsmaldivesMuizzuReportsLeaked
Advertisement
Next Article