முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"பிரதமர் மோடி மீதான அருவருக்கத்தக்க பேச்சு.."! அமைச்சர்களுக்கு கண்டனம் தெரிவித்த மாலத்தீவு முன்னாள் அதிபர்.!

04:11 PM Jan 07, 2024 IST | 1newsnationuser7
Advertisement

மாலத்தீவு நாட்டைச் சார்ந்த அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அமைச்சர்களின் பேச்சுக்கு மாலத்தீவு ஜனாதிபதி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அதிபர் சமூக வலைதளம் மூலமாக கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Advertisement

2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை மாலத்தீவு நாட்டின் அதிபராக இருந்தவர் முகமது நசீத். 2012 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து முகமது மொய்ஷூ அந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

What appalling language by Maldives Government official @shiuna_m towards the leader of a key ally, that is instrumental for Maldives’ security and prosperity. @MMuizzu gov must distance itself from these comments and give clear assurance to India they do not reflect gov policy.

— Mohamed Nasheed (@MohamedNasheed) January 7, 2024

அப்போது அந்தத் தீவின் கடற்கரை அழகு மற்றும் பவளப்பாறைகளை பற்றி தனது X வலைதளத்தில் பதிவு செய்து பெருமிதம் கொண்டார். இதற்கு பதில் அளித்து பதிவு செய்த மாலத்தீவு அமைச்சர்கள் இந்தியா அழுக்கான தேசம் இந்தியர்கள் அசுத்தமானவர்கள். இந்தியாவால் மாலத்தீவு போன்று தூய்மையான சுற்றுலா கொடுக்க முடியாது என்பது போன்ற அவதூறுகளை பதிவு செய்திருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் மாலத்தீவின் முன்னாள் அதிபர் முஹம்மது நசீத். இதுகுறித்து தற்போதைய அதிபரை கேட்டுக் கொண்டிருக்கும் அவர் நமது நாட்டுடன் நெருங்கிய நட்புறவில் இருக்கும் ஒரு நாட்டின் தலைவரைப் பற்றி உங்கள் அமைச்சரவையில் இருப்பவர்கள் பேசியது வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்தியா நமது பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒரு முக்கியமான நட்பு நாடு. அவர்கள் பேசிய அருவருக்கத்தக்க கருத்துக்களுக்கும் மாலத்தீவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது போன்ற அமைச்சர்களிடமிருந்து அரசு மற்றும் நாட்டின் கொள்கைகளை தூரமாக்கி வையுங்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Tags :
Condemnsmodiprime minister
Advertisement
Next Article