For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சீனாவை மீறி மீண்டும் இந்தியாவுடன் ஒப்பந்தம் வைக்கும் மாலத்தீவு..!! பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிகாரிகள்..!!

India has decided to put the Maldives in its hands, which has started to get closer to India again.
03:01 PM May 28, 2024 IST | Chella
சீனாவை மீறி மீண்டும் இந்தியாவுடன் ஒப்பந்தம் வைக்கும் மாலத்தீவு     பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிகாரிகள்
Advertisement

ஆசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சக்திகளாக விளங்கும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே, யார் பெரியவர் என்ற மோதல் உருவாகியுள்ளது. இதில் சீனா தனக்கு ஆதரவாக சில நாடுகளை அணி சேர்க்க தொடங்கியுள்ளது. பணம் மூலமாகவும், மிரட்டல் மூலமாகவும் தன் சொல் பேச்சுக்கு ஆடும் நாடுகளை சீனா சேர்த்து வருகிறது. பாகிஸ்தான், இலங்கை என்ற அந்த நாடுகளின் வரிசையில் தற்போது மாலத்தீவும் இணைந்துள்ளது. நீண்டகாலமாக இந்தியாவுடன் சகோதர உறவை பேணி வந்த மாலத்தீவு, தற்போது சீனாவுக்கு ஆதரவாக மாறிவிட்டது.

Advertisement

தீவிர சீன ஆதரவாளரான முகமது முய்சு, அந்நாட்டின் அதிபராக பதவியேற்றது முதலாக, இந்தியாவிடம் இருந்து மாலத்தீவு விலகி செல்ல தொடங்கியது. இதன் உச்சக்கட்டமாக, பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் அளவுக்கு மாலத்தீவு அமைச்சர்கள் சென்றனர். இதனால் கோபமடைந்த இந்தியர்கள், மாலத்தீவு சுற்றுலாவை புறக்கணிக்க தொடங்கினர். இதற்கு பதிலடியாக, தங்கள் நாட்டில் இருந்த இந்திய ராணுவ வீரர்களை மாலத்தீவு வெளியேற்றியது. இந்திய ராணுவ வீரர்கள் வெளியேறியதால் மாலத்தீவு பாதுகாப்பில் பெரும் சவால் ஏற்பட்டிருப்பதை அந்நாடே கவலையும் ஒத்துக்கொண்டது.

இந்நிலையில்தான், இந்தியர்களின் முக்கியத்துவத்தை மாலத்தீவு உணரத் தொடங்கியுள்ளது. இந்தியர்களின் சுற்றுலா புறக்கணிப்பால் மாலத்தீவு பொருளாதாரமே படுத்துவிட்டது. அதனால் மாலத்தீவுக்கு டூர் வருமாறு அந்நாட்டு அமைச்சர் வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு மாலத்தீவு சென்றது. மாலத்தீவு இவ்வாறு நெருக்கம் காட்டியதை அடுத்து, இந்தியாவும் பழைய விஷயங்களை மறந்துவிட்டு மாலத்தீவுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாலத்தீவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு 50 மில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா வழங்கியது. அதுமட்டுமல்லாமல், மாலத்தீவுக்கு விதிக்கப்பட்ட ஏற்றுமதி கட்டுப்பாடுகளை உடனடியாக தளர்த்தி, டன் கணக்கிலான உணவு தானியங்களையும் இந்தியா அனுப்பி வைத்தது.

இந்நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவுடன் மீண்டும் நெருங்கி வரத் தொடங்கிய மாலத்தீவை, மொத்தமாக கைக்குள் போட இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்நாட்டுடன் FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா இவ்வாறு முயற்சி செய்து வருவதை மாலத்தீவு அமைச்சர் முகமது சயீத் அண்மையில் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், இந்தியா - மாலத்தீவு இடையே எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மிக எளிதாக வர்த்தகம் நடைபெறும்.

இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவும், மாலத்தீவும் பரஸ்பரம் பயனடையும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்தையை இந்திய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்தியா உடனான ஒப்பந்தத்தை மாலத்தீவு விரும்புகிறது என்ற போதிலும், சீனாவை நினைத்து தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால்தான், இந்தியாவுடன் மட்டுமின்றி சீனா உள்ளிட்ட நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மாலத்தீவு மேற்கொள்ளும் என அந்நாட்டு அமைச்சர் முகமது சயீத் சூசகமாக தெரிவித்தார். ஏற்கனவே மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 1981ஆம் ஆண்டு தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SAFTA) கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Read More : சொந்தமா தொழில் தொடங்க போறீங்களா..? ரூ.5 கோடி வரை கடன் பெறலாம்..!! இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement