மோகன்லால் உட்பட 17 செயற்குழு உறுப்பினர்கள் ராஜினாமா..!! என்ன நடக்கிறது மலையாள சினிமாவில்?
பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் மோகன்லால் உட்பட 17 சங்க நிர்வாகிகள் கூண்டாக பதவியை ராஜினாமா செய்தனர்.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அறிக்கைக்கு பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பாலியல் தொல்லைகள் நடைபெற்றதாக பேசிவருகின்றனர். முன்னணி திரைக் கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைத்துறை பற்றி எரிகிறது.
சமீபத்தில் பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அதனைத்தொடர்ந்து, தமிழ் திரைத்துறையில் பலரும் அறிந்த நடிகரான ரியாஸ் கான் மீது கேரளாவை சேர்ந்த நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் ராஜினாமா செய்துள்ளார். மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக ஹேமா குழு அறிக்கை அளித்தது. கேரள திரையுலகில் நடிகைகள் பலர் பாலியல் புகார்களை எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. மலையாள திரைத்துறையில் நடிகர்கள், இயக்குநர்கள் மீது இதுவரை 8 நடிகைகள் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Read more ; தேர்தல் ஆணையத்தில் விஜய் மீது பரபரப்பு புகார்..!! நடவடிக்கை பாய்கிறதா..?