”மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கினால், பெண்களை ஒதுக்கி வைப்பதற்கு வழிவகுக்கும்”..!! சுப்ரீம் கோர்ட் கருத்து..!!
”நீதிபதி மாதவிடாய் விடுமுறை என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது விடுமுறை வழங்கப்படுவதில் தெளிவான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி சந்திர சூட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி மாதவிடாய் விடுமுறை என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை வழங்குவதை கட்டாயம் ஆக்கினால் அது அவர்களை ஒதுக்கி வைப்பதற்கு வழிவகுக்கும். பெண்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் அவர்களுக்கே பாதகமாக கூட அமையலாம்.
மாதவிடாய் நாட்களில் விடுமுறை என்பது கட்டாயமாக்கப்பட்டால், அது அவர்களின் பணியை பாதிக்கும். இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், சம்பந்தப்பட்ட மனுதாரர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடலாம்” என நீதிபதி தெரிவித்தார்.