அடி தூள்.! மேக் இன் இந்தியா.! வெளிநாட்டு மதுபான பிராண்டுகளை ஓடவிட்ட இந்திய தயாரிப்புகள்.!
உலக மதுபான சந்தையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிங்கில் மால்ட் வகை மதுபானங்கள் உலகளாவிய விஸ்கி பிராண்டுகளை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்திருப்பதாக மதுபான நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் 2023 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி சிங்கிள் மால்ட் விற்பனையில் 53 சதவீத விற்பனை இடத்தை இந்திய நிறுவனங்கள் பெற்றிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் விஸ்கி தயாரிப்பில் இனிய நிறுவனங்கள் மிகப்பெரிய சாதனையை புரிந்து இருக்கின்றன. இந்திய மதுபான சந்தையில் 23 சதவீத இடத்தை இந்திய தயாரிப்புகள் பெற்றிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் சிங்கிள் மால்ட் 6,75,000 கேஸ் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. 3,45,000 கேஸ் இந்திய மதுபானங்கள் விற்பனையானதாக அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பான சாதனையில் இந்திய தயாரிப்பு மதுபான நிறுவனங்களான அம்ருத் பால் ஜான் ராம்பூர் மற்றும் ரெடிகோ காடவன் ஆகியவை இடம் பெற்று இருக்கின்றன.
மேலும் வெளிநாட்டு மது வகைகளில் கிளென்லிவேட் மெக்கல்லன் லாகவுளின் மற்றும் டாலீஸ்கர் மது வகைகள் அதிக விற்பனையாகி இருக்கிறது. 2023 ஆம் வருடம் அமெரிக்காவில் நடைபெற்ற விஸ்கிஸ் ஆப் த வேர்ல்ட் அவார்ட்ஸ் போட்டியில் இந்தியாவின் சிங்கிள் மால்ட் பிராண்டான இந்திரி விஸ்கி ஸ்காட்ச் மற்றும் அமெரிக்க பிராண்டுகளை தோற்கடித்து விருது வென்று இருக்கிறது. மேலும் பிளைன்டட் டேஸ்டிங் பிரிவில் பெஸ்ட் இன் ஷோ விருதையும் வென்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய விஸ்கி சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் ஸ்காட்ச் விஸ்கியை விட இந்திய விஸ்கிகளின் விற்பனை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2027 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் சிங்கிள் மால்ட் மதுபான வகைகள் ஸ்காட்ச் விஸ்கியின் சந்தையை விட 13 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு பிராண்டுகளின் மீதான மோகம் மக்களிடம் அதிகரித்து வருவதால் இந்திய மதுபான நிறுவனங்களும் தங்களது தயாரிப்பை அதிகப்படுத்த முயற்சி செய்து வருகிறது .. 2025 ஆம் ஆண்டுக்குள் நாள் ஒன்றுக்கு 20,000 லிட்டர் மதுபானங்களை தயாரிக்கும் திறனை ஈட்டுவதற்கு இந்திய மதுபான நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.