For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

லாட்ஜில் ரூம் போட்டு ஆசை தீர உல்லாசம்..!! ஐடியா கொடுத்த கள்ளக்காதலன்..!! ஆத்திரத்தில் கள்ளக்காதலி செய்த பகீர் சம்பவம்..!!

A woman named Nandini was arrested after she strangled and killed a counterfeiter after asking him to engage in sex work.
03:42 PM Jun 17, 2024 IST | Chella
லாட்ஜில் ரூம் போட்டு ஆசை தீர உல்லாசம்     ஐடியா கொடுத்த கள்ளக்காதலன்     ஆத்திரத்தில் கள்ளக்காதலி செய்த பகீர் சம்பவம்
Advertisement

கள்ளக்காதலன் பாலியல் தொழிலில் ஈடுபட சொன்னதால், அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்த நந்தினி என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Advertisement

விருதுநகர் காந்தி நகரை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (27). இவர், திருப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில், நந்தினி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. நந்தினிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கிவிட்டார். நாளடைவில் நந்தினிக்கும், காசிக்கும் இடையேயான நட்பு கள்ளக்காதலாக மாறியது. 4 நாட்களுக்கு முன்பு விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டிலிருக்கும் ஒரு லாட்ஜில் இருவரும் ரூம் போட்டுள்ளனர். அப்போது, திடீரென வீட்டிற்கு சென்ற காசி, தன்னுடைய அம்மாவிடம் நந்தினியுடனான பழக்கம் குறித்தும், தாங்கள் லாட்ஜில் தங்கியிருப்பது குறித்தும் சொன்னதாக தெரிகிறது.

பிறகு மீண்டும் லாட்ஜூக்கு வந்த காசி, அன்றைய தினம் அதாவது கடந்த 14ஆம் தேதி இரவு லாட்ஜில் இறந்து கிடந்தார். அப்போது நந்தினி லாட்ஜில் இல்லை. இதையடுத்து, தன்னுடைய மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக விருதுநகர் கிழக்கு போலீசில் காசியின் தாய் செல்வராணி புகார் அளித்தார். போலீசாரும் நந்தினியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் மொத்த உண்மையையும் வெளிவந்தது. அதாவது, அவரது தாய்மாமனுடன் நந்தினிக்கு முதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணவர் நாளுக்கு நாள் மதுபோதைக்கு ஆளாகிவிட்டதால், அவரை பிரிந்துள்ளார் நந்தினி.

பிறகு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தபோதுதான், காசியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போதிருந்து இருவருமே அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். 4 நாட்களுக்கு முன்பும் லாட்ஜில் ரூம் போட்டு தங்கியதுபோதுகூட நந்தினியும், காசியும் இருவருமே ஒன்றாக சேர்ந்து தண்ணி அடித்தார்களாம். அப்போது, நந்தினியை பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று காசி கட்டாயப்படுத்தியுள்ளார். அப்போதுதான் இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது. ஒருவரையொருவர் அடித்து கொண்டுள்ளனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நந்தினி, காசியின் கழுத்தை நெரித்ததுடன், தன்னிடமிருந்த ரப்பர் பேண்ட்டால், காசியின் கழுத்தை இறுக்கியிருக்கிறார்.

இதில் காசி அங்கேயே மூச்சுத்திணறி இறந்துள்ளார். பிறகு நந்தினி, திருப்பூர் தப்பி சென்றுவிட்டாராம்" இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. தொடர் விசாரணை நந்தினியிடம் நடந்துவருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : புதிதாக பாலகம் தொடங்க விருப்பமா..? சொந்தமா தொழில் ஆரம்பிக்க சூப்பர் ஐடியா..!!

Tags :
Advertisement