அதிகாலையிலே கோர விபத்து.. டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 தொழிலாளர்கள் பலி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் வாரணாசி-பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் டிராக்டரில் பயணம் செய்த 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த தொழிலாளர்கள் படோஹியைச் சேர்ந்தவர்கள். கட்டுமான வேலைகளை முடித்துவிட்டு டிராக்டரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து காவல் கண்காணிப்பாளர் அபிநந்தன் கூறியதாவது: டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார், இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உயிரிழந்த தொழிலாளர்கள் ராம்சிங்பூர், மிர்ஜாமுராத் கிராமங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். காயமடைந்த ஆகாஷ் குமார், ஜமுனி மற்றும் அஜய் சரோஜ் ஆகிய 3 பேரும் அதே கிராமங்களை சேர்ந்தவர்கள். நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தை அடுத்து, அந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டதால், சேதமடைந்த வாகனங்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Read more : WT20 WC!. இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதல்!