For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மேஜர் பிரச்சனை..!! குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்வதில் சிக்கல்..!! கட்டுமானத் துறையினர் கோரிக்கை..!!

02:05 PM Mar 25, 2024 IST | Chella
மேஜர் பிரச்சனை     குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்வதில் சிக்கல்     கட்டுமானத் துறையினர் கோரிக்கை
Advertisement

சில ரியல் எஸ்டேட் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, வீடு, மனைப்பிரிவு திட்டங்களை பதிவு செய்யும் பணிகள் முடங்கி உள்ளதாக புகார் ஒன்று எழுந்துள்ளது. வீட்டுமனை திட்டங்களில் ஏற்படும் சர்ச்சைகளை தீர்ப்பதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியிருந்தது.

Advertisement

அதேபோல, 2016ஆம் ஆண்டு இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதியவும், புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல்முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, 5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும். வீடு அல்லது மனை வாங்குவோர், கட்டுநரின் பெயர், முகவரி, வங்கி தகவல்கள், நிறுவனத்தின் பெயர், இப்போதைய நிலை, எப்போது முடிவடையும்? போன்ற தகவல்களை எல்லாம் www.tnr-e-ra.in என்ற வெப்சைட்டின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

ஆகையால், "ரெரா" சட்டத்தில் பதிவு செய்யப்படாத சொத்துக்களை வாங்கும் நிலையில், ஏதாவது சிக்கல்கள் வந்தால், ஒழுங்குமுறை குழுமத்தில் புகார் அளிக்க முடியாது. வரையறைக்கு உட்பட்ட திட்டங்கள் பதிவு செய்யப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம். அந்தவகையில், 8 அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகள், மனைகள் அடங்கிய திட்டங்களை பதிவு செய்வது கட்டாயம் ஆகும். இந்நிலையில், ரியல் எஸ்டேட் அதிகாரிகளின் அலட்சியத்தால், வீடு, மனைப்பிரிவு திட்டங்களை பதிவு செய்யும் பணிகள் முடங்கிஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அதாவது, குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துபவர்கள், விண்ணப்பங்களை அளித்தாலும், அதை ஆய்வு செய்வது, பதிவு செய்வதில் பாரபட்சம் காட்டப்பவதாகவும், பெரும்பாலான திட்டங்களின் பதிவு விஷயத்தில், முடிவு எடுப்பதில் அதிகபட்ச தாமதம் ஏற்படுவதாகவும் பிரபலமான கட்டுமான நிறுவனங்கள் பெயரில் வரும் விண்ணப்பங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதைவிட முக்கியமாக, சில நிறுவனங்களின் விண்ணப்பத்தில், நகர், ஊரமைப்பு துறை ஒப்புதல், உள்ளாட்சி அமைப்பு ஒப்புதல் தொடர்பான ஆவணங்களின்றி பதிவு செய்யப்படுவதாகவும் புகார் கிளம்பியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம், ரியல் எஸ்டேட் ஆணையத்தில், போதிய பணியாளர்கள் இல்லை என்பதுடன், அரசு ஒப்புதல் அளித்த பல்வேறு பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளதாம். எனவே, குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்வதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டுமான துறையினர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Read More : நேற்று அண்ணாமலைக்காக பிரச்சாரம்..!! இன்று அதிமுகவுக்காக பிரச்சாரம்..!! முக்கிய பொறுப்பாளரை தட்டித் தூக்கிய எடப்பாடி..!!

Advertisement