For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உரிமம் இல்லாத திருட்டு படம் வெளியீடு...! திரைத்துறை ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வரை இழப்பு...! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்...!

08:16 AM Nov 04, 2023 IST | 1newsnationuser2
உரிமம் இல்லாத திருட்டு படம் வெளியீடு      திரைத்துறை ஆண்டுக்கு ரூ 20 000 கோடி வரை இழப்பு     மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
Advertisement

பைரசி எனப்படும் உரிமம் இல்லாத திருட்டு வெளியீடுகளால் திரைத்துறை ஆண்டுக்கு ரூ. 20,000 கோடி வரை இழப்பை சந்தித்து வரும் நிலையில், நாட்டில் திரைப்பட திருட்டு வெளியீடுகளைத் தடுக்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஒளிப்பதிவு (திருத்த) சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

Advertisement

அதன் பின்னர், திரைப்பட திருட்டுகளுக்கு எதிரான புகார்களைப் பெறவும், டிஜிட்டல் தளங்களில் திருட்டு உள்ளடக்கத்தை அகற்றுவதற்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் தொடர்பான செயல்முறைகளை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. பதிப்புரிமைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கையைத் தவிர, திரைப்படத் திருட்டு உள்ளடக்கத்தின் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க எந்த செயல்முறையும் இப்போதைக்கு இல்லை.

இணையதள வசதிகள் பெருகியதாலும், திரைப்பட உள்ளடக்கத்தை இலவசமாகப் பார்க்க கிட்டத்தட்ட அனைவரும் ஆர்வமாக இருப்பதாலும், திரைப்படத் திருட்டு வெளியீடு அதிகரித்துள்ளது. இந்தப் புதிய நடவடிக்கையானது திரைப்படத் திருட்டு வெளியீடு நடந்தால் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்.

Tags :
Advertisement