MAHARASTRA | அகல்யா நகராக மாறிய அஹமத் நகர்.!! மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்.!
MAHARASTRA: மகாராஷ்டிரா மாநிலத்தின் அஹமத் நகர்(AHMEDNAGAR) அஹல்யா நகர்(AHILYA NAGAR) என பெயர் மாற்ற அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 8 பிரிட்டிஷ் கால ரயில் நிலையங்களின் பெயரை மாற்றவும் மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவுக்கு முதல்வர் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா(MAHARASTRA) மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமையன்று அஹமத் நகரை(AHMEDNAGAR) அஹல்யா நகர் என பெயர் மாற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் பிரிட்டிஷ் காலத்தின் பெயர்களாக இருந்த 8 மும்பை ரயில் நிலையங்களின் பெயர்களை மறுபெயரிடவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், உட்டான் (பயந்தர்) மற்றும் விரார் (பால்கர்) இடையே கடல் இணைப்பை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் 2.5 ஏக்கர் நிலத்தை மகாராஷ்டிரா பவன் கட்டுவதற்கு வாங்க அமைச்சரவை மேலும் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பட்ஜெட் முன்மொழிவு ஏற்கனவே மகாராஷ்டிரா சட்டசபையின் முந்தைய பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில பட்ஜெட்டில் செய்யப்பட்டது.