For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகாராஷ்டிரா : ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி..!! - அமைச்சரவை பதவி ஏற்பு-க்கு மத்தியில் பரபரப்பு

Maharashtra: Eknath Shinde's health shows no signs of improvement, visits hospital in Thane
03:36 PM Dec 03, 2024 IST | Mari Thangam
மகாராஷ்டிரா   ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி       அமைச்சரவை பதவி ஏற்பு க்கு மத்தியில் பரபரப்பு
Advertisement

கடந்த வாரம் மகாயுதி கூட்டணி தலைவர்கள், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பை முடித்து மகாராஷ்டிரா திரும்பிய ஷிண்டே, நேராக தனது சொந்த கிராமமான சதாரா மாவட்டத்திற்கு சென்றார். அங்கிருந்து அவர் கடந்த 1ம் தேதி மும்பை திரும்பினார்.

Advertisement

இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ரத்த அழுத்தம் மற்றும் காய்ச்சல், தொண்டையில் வலி என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலையில் ஏக்நாத் ஷிண்டே தானேயில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக தகவலும் வெளியாகியுள்ளது.

இதனால் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை பதவியேற்கும்போது அதில் பங்கேற்பாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய முதல்வர் யார் என்று இரண்டு நாளில் தெரிய வரும் என்று பாஜக மேலிடம் தெரிவித்துவிட்டார். சிவசேனாவில் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

Read more ; Kerala | நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து.. 34 பயணிகளின் நிலை என்ன? – பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Tags :
Advertisement