"ஆடையை கழற்றிப் பாருங்கள்" சீதை குறித்த சர்ச்சை கருத்து..!! - மன்னிப்பு கோரிய இந்திரதேவ் மகாராஜ்
பிருந்தாவனத்தைச் சேர்ந்த கதாசிரியர் மஹாமண்டலேஷ்வர் இந்திரதேவ் மகாராஜ், அன்னை சீதாவின் தோற்றம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட்டுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருந்தாவனத்தில் பரிக்கிரமா மார்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ ராதா கிஷோரி தாமில் வசிக்கும் மஹாமண்டலேஷ்வர் இந்திரதேவ் மகாராஜ், அன்னை சீதா மற்றும் ராமர் வேடங்களில் நடித்த நடிகர்கள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார். இது பலரது உணர்வுகளையும் மத உணர்வுகளையும் ஆழமாக புண்படுத்தியுள்ளது.
மகாமண்டலேஷ்வர் இந்திரதேவ் தனது கதையின் போது ராமர் மற்றும் சீதையாக நடிக்கும் கதாபாத்திரங்கள் சிகரெட் புகைப்பதாகவும் மது அருந்துவதாகவும் கூறினார். மேலும் அவர்களின் ஆடையை கழற்றிப் பாருங்கள், இது சீதை அல்ல, இது கும்பகர்ணன் எனக் கூறியிருந்தார். மிகவும் மதிக்கப்படும் தெய்வங்களைப் பற்றிய அவரது அநாகரீகமான கருத்துக்கள் பெரும் சலசலப்பை உருவாக்கியது,
இந்திரதேவ் கதையின் வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்துகின்றனர். அதைத் தொடர்ந்து மகாமண்டலேஷ்வர் இந்திரதேவ் மன்னிப்பு கேட்டார். அதோடு, புனித தெய்வங்களை அவமதிக்கவோ, யாருடைய மனதையும் புண்படுத்தவோ நான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் கூறினார்.
இருப்பினும், பல மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்திரதேவ் மகாராஜின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அகில பாரத இந்து மகாசபாவின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பண்டிட் சஞ்சய், இந்திரதேவ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
Read more ; நீங்கள் டயட்டில் இருக்கீங்களா..? அப்படினா இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க..!!