மகன்களுடன் அன்னையர் தினம் கொண்டாடிய நயன்..... இணையத்தில் வைரலாகும் வீடியோ....
நடிகை நயன்தாரா அவரது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
தென்னிந்திய சினிமாவில் மாஸ் காட்டி வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். தற்போது, இவர் நடித்து வரும் மண்ணாங்கட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதனையடுத்து, 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டனர். அவ்வப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களின் மகன்களுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், நயன்தாரா அவரது மகன்களான உயிர் மற்றும் உலகுடன் குழந்தையோடு குழந்தையாய் விளையாடிக்கொண்டு இருக்கிறார். குழந்தையை தோள் மேல் தூக்கி வைத்து விளையாடுவது,
மகனை முத்தமிடுவது, கொஞ்சுவது, சிரிப்பது, கைப் பிடித்து நடப்பது என அந்த வீடியோவில் காட்சிகள் அமைந்துள்ளன. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், நீதான் என்னுடைய உயிர் மற்றும் உலகம் என அந்த வீடியோவில் நயன்தாராவை குறித்து அவர் பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Happy Mother’s Day👩👦👦to all the Super Moms 😇💝 pic.twitter.com/BxYyOJl0vK
— Nayanthara✨ (@NayantharaU) May 12, 2024
இதற்கென்றே தனி சேனலா..? கலாநிதி மாறனின் அடுத்த பிளான்..!! 24 மணி நேரமும் ஒளிபரப்பு..!!