அடி தூள்..! இனி மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 கிடையாது...? விரைவில் வரப்போகும் புதிய அறிவிப்பு...! என்ன தெரியுமா...?
தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு அடிப்படையில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை வழங்குகிறது. இந்த திட்டத்தில் இப்போது 1 கோடியே 15 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுகிறார்கள். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழகத்தில் 1.15 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் 15-ம் தேதி ரூ.1000 வழங்கப்படுகிறது. முன்னாள் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய பயனாளிகள் கலைஞர் உரிமைத் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர். இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி அடுத்த 90 நாட்களுக்குள் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இதில் ஏற்கனவே தகுதி இருந்தும் சேர்க்கபடாமல் இருக்கும் பெண்கள் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும் மீண்டும் இந்த திட்டத்தில் சேர வாய்ப்புள்ளது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் தொகை அடுத்த வருடம் பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. டெல்லியில் மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய் வரை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகியவை இது தொடர்பாக வாக்குறுதி அளித்துள்ள நிலையில்தான் தமிழ்நாட்டில் இதே தொகை உயர்த்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம்.