கல்லீரலை தானமாக கொடுத்து மகளின் உயிரைக் காப்பாற்றிய தந்தை..!
அபுதாபியில் அறிய நோயினால் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு கல்லீரலை தானமாக கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இம்ரான் கான் அபுதாபியில் வசித்து வருகிறார். இவரது மகள் ரசியா, அரிய மரபணு நோயினால் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளானார். இந்த பாதிப்பு லட்சத்தில் ஒருவருக்கு தான் ஏற்படும் என்பதை மருத்துவர்கள் சொல்லி அவர் அறிந்து கொண்டுள்ளார். இதே கல்லீரல் பாதிப்பால் தனது மூத்த மகள் ஷைமாவையும்(4 வயது), அவர் இழந்துள்ள நிலையில், மீண்டும் அதே பாதிப்பு தனது மற்றொரு மகளுக்கும் ஏற்பட அதிர்ந்து போனார்.
ரசியாவை காக்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். இதற்கான சிகிச்சை கட்டணம் சுமார் 10 லட்சம் திர்கம். இது அதிகம் என்பதால் அவர் அமீரக அரசின் தொண்டு நிறுவனமான எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் உதவியை நாடினார். "தந்தை என்ற முறையில் தனது மகளுக்காக இதனை செய்ய வேண்டும் என அதை செய்தேன்' என பெருமிதமாக இம்ரான் கூறினார்.
தந்தை மற்றும் மகள் என இருவருக்கும் ஒரே நேரத்தில் கடந்த மே மாதம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 12 மணி நேரம் இந்த சிகிச்சை நடந்துள்ளது. தனது மகளின் உயிரை காப்பாற்ற தனது கல்லுரலை தானமாக வழங்கிய சம்பவம் அனைவரையும் ஆச்சிரியத்தியில் ஆழ்த்தியுள்ளது.
read more.. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஃபிளஷ் கழிவறையை பயன்படுத்திய சீனர்கள்! – முழுவிவரம் இதோ..