முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு.. வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கழன்று சென்ற பெட்டிகள்..!! - பயணிகள் அதிர்ச்சி

Magadh Express was traveling in the state of Bihar when the link of the coaches broke and split into two.
04:23 PM Sep 08, 2024 IST | Mari Thangam
Advertisement

டெல்லியிலிருந்து மேற் வங்க மாநிலம், இஸ்லாம்பூருக்கு மகத் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் வழக்கம் போல் இன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் பிகாரின் பக்சர் மாவட்டம் அருகே சென்ற போது, ட்வினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பெட்டிகளின் இணைப்பு உடைந்து இரண்டாக பிரிந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதுகுறித்து, கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஷர்ஸ்வதி சந்திரா கூறியதாவது, புதுதில்லியில் இருந்து இஸ்லாம்பூருக்குச் சென்ற மகத் எக்ஸ்பிரஸ் (20802) இணைப்பு உடைந்தது. ட்வினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் இடையே கடந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ரயில் எஞ்சினிலிருந்து 13வது பெட்டி எண் S-7 மற்றும் என்ஜினில் இருந்து 14வது பெட்டி எண் S-6 ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு உடைந்து பிரிந்தது.

மீட்புக் குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். விரைவில் அதைச் சரிசெய்ய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் ரயில் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Read more ; ப்ளீஸ்.. பாலியல் புகார் பற்றி மீடியாவிடம் பேசாதீங்க..!! பேரு கெட்டு போச்சு!! – நடிகை ரோகினி

Tags :
Biharcoaches brokeMagadh Express
Advertisement
Next Article