மதுரை மக்களே எச்சரிக்கை!… டெங்கு பாதிப்பில் முதலிடம் பிடித்ததால் அச்சம்!
டெங்கு பாதிப்பு குறைவான மாவட்டங்களில் ராமநாதபுரம் சுகாதார மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல், பாதிப்பு அதிகரிப்பில் மதுரை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் உற்பத்தியும், டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இருப்பினும், மழைக்கால நோய்களால் அவ்வபோது டெங்கு காய்ச்சல் அதிகரிக்கிறது. அந்தவகையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கும். கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பாதிப்பை அதிகளவில் ஏற்படுத்தும்.
தற்போது, வடகிழக்கு பருவமழை காரணமாகவும் குளிர்காலமாக இருப்பதாலும் டெங்கு கொசு புழு உற்பத்தி அதிகம் ஏற்பட வாய்ப்பாக உள்ளது. இதனால் பொது மக்களுக்கு அதிகளவில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்தும் பொருட்டு போதிய அளவில் கொசுக்களை ஒழிக்கும் வகையில் சுகாதாரப் பணியாளர்கள் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், டெங்கு பாதிப்பு குறைவான மாவட்டங்களில் ராமநாதபுரம் சுகாதார மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல், பாதிப்பு அதிகரிப்பில் மதுரை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 46 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இதில் ராமநாதபுரம் சுகாதார மாவட்டம் பாதிப்பு குறைவில் 46வது இடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள பரமக்குடி சுகாதார மாவட்டம் 40 வது இடம் பெற்றுள்ளது. டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ராமநாதபுரத்தில் டெங்கு பாதிப்பில் 6 பேர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.