NO ENTRY' "இந்து அல்லாதோர், கடவுள் மறுப்பாளர்களுக்கு அனுமதி மறுப்பு.." வெளியான பரபரப்பு தீர்ப்பு.!
'
திண்டுக்கல் மாவட்டம் பழனி, முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். உலகப் பிரசித்தி பெற்ற இந்த வழிபாட்டு தளத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்தக் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மற்றும் அபிஷேகப் பால் புகழ் பெற்றதாகும்.
இத்தனை சிறப்புகளைப் பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்களை தவிர மற்ற மதத்தவர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூலை மாதம் சாகுல் என்பவர் பழனி முருகன் கோவிலுக்கு சுற்றி பார்க்க சென்றபோது இது தொடர்பான மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. இது தொடர்பான வழக்கில் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்குமாறு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது .
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான பரபரப்பு தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவித்திருக்கிறது. கோவிலின் கொடிமரம் தாண்டி மாற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை என நீதிபதி ஸ்ரீமதி பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்து மதம் அல்லாதவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி முருகன் கோவிலுக்குள் செல்வதற்கு தடை விதிப்பதாக தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.