முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தத்தளிக்கும் மதுரை மாவட்டம்..! 15 நிமிடத்தில் 45 மி.மீ மழை..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!

Madurai city received 45 mm of rain between 3 and 3:15 pm yesterday.
05:57 AM Oct 26, 2024 IST | Vignesh
Advertisement

மதுரை நகரில் நேற்று மதியம் 3 முதல் 3:15 மணிக்குள் 45 மி.மீ., மழை பெய்தது. இதனால் வீடுகளில் மழை மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று காலையுடன் நிறைவடை 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆனைமடுவு அணையில் 15 செமீ, தஞ்சாவூர் ஒரத்தநாடில் 13 செமீ, கன்னியாகுமரி கோழிப்போர்விளை, தக்கலை, நெய்யூர், திருவாரூர் மன்னார்குடி, தஞ்சை ஆடுதுறை ஆகிய இடங்களில் தலா 11 செமீ, அரியலூர் மாவட்டம் சுததமல்லி அணை, குடவாசல், இரணியலில் தலா 10 செமீ, மஞ்சளாறு, நீடாமங்கலத்தில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது.

Advertisement

மதுரை நகரில் நேற்று மதியம் 3 முதல் 3:15 மணிக்குள் 45 மி.மீ., மழை பெய்தது. சாலை முழுவதும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நான்காவது வார்டு பார்க் டவுன் குடியிருப்பை மழைநீர் சூழ்ந்தது. ஆலங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. கனமழை காரணமாக சர்வேயர் காலனி, ஒத்தக்கடை காந்தி நகர் பகுதியிலும் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. மலை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags :
madurairainrain alertRain notification
Advertisement
Next Article