Amit Shah | "குரூப்ல டூப்பு"… அமித் ஷா புகைப்படத்திற்கு பதிலாக இடம்பெற்ற நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம்.!!
Amit Shah: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 102 பாராளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் தொடர்ந்து சுற்று பயணம் மேற்கொண்டு பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வாகன பேரணி மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இந்நிலையில் மதுரை பாஜக வேட்பாளரை ஆதரித்து மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாகனப் பேரணி மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இவரது வருகையின் போது மதுரையில் ஒரு காமெடியான நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. அமித் ஷாவை(Amit Shah) வரவேற்பதற்காக சுவரொட்டிகளை தயார் தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் அமித் ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் மற்றும் இயக்குனர் சந்தன பாரதியின் புகைப்படம் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. இருவரின் உருவமும் குறை போன்று இருப்பதால் இந்த தவறு நடைபெற்றிருக்கிறது. இதைக் கூட கவனிக்காமல் பாரதிய ஜனதா கட்சியினர் அந்தப் போஸ்டரை மதுரையில் ஒட்டி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பாஜகவை சமூக வலைதள வாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.