முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தப்பித்த அதிமுக முன்னாள் அமைச்சர்...! ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...!

06:00 AM Apr 25, 2024 IST | Vignesh
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ளக் கூடாது என மிரட்டியதாக தாந்தோணி ஊராட்சி ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் மற்றும் 4 பேர் மீது புகார் அளித்தார். ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சேகரும், முன்னாள் அமைச்சரின் சகோதரர் என்பதாலும், பாலம் அமைக்கக் கூடாது என தொழிலாளர்களை மிரட்டியதோடு, ஜே.சி.பி.யையும் பயன்படுத்தி பணியை முடக்கினார்.

Advertisement

விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் மற்றும் 3 பேர் மீது ஐபிசி 147, 341, 353, மற்றும் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

மனுதாரர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடுதல் அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அமைச்சர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இது திட்டமிட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்தார். இந்த மனு நேற்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது, வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement
Next Article