முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Madras Eye | ஆட்டம் காட்டும் மெட்ராஸ் ஐ..!! அறிகுறிகள் என்ன..? வராமல் தடுப்பது எப்படி..?

Wash your hands thoroughly with soap and water immediately after coming out and touching an infected person.
08:52 AM Nov 09, 2024 IST | Chella
Advertisement

மெட்ராஸ்-ஐ அல்லது வெண்படல அழற்சி பிரச்சனை வந்தால் கண்கள் சிவந்து கண்ணீர் வந்துகொண்டே இருக்கும். இதனால் கண்கள் சிவந்து இரத்தக் கலரில் காணப்படும். மேலும் கண்களில் அரிப்பு, வலி போன்றவையும் இருக்கும். இதனால், கண்களை கசக்க முடியாது. மேலும், நமைச்சலும் அரிப்பும் கண்களில் அழுக்கும் இருந்துகொண்டே இருக்கும்.

Advertisement

கான்ஜூன்க்டிவிடிஸ் என்பது ஒரு கண் தொற்றுநோயாகும். இது தமிழ்நாட்டில் மெட்ராஸ் ஐ என்றும் பிற மாநிலங்களில் பிங்க் ஐ என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நபருக்கு இந்த பிரச்சனை ஏற்படும்போது கண்கள் சிவந்து வீக்கமடையும். இதில் இருந்து வெளிப்படும் தண்ணீர் மூலம் இது பிறருக்கும் பரவ வாய்ப்புள்ளாது. ஒவ்வாமை அல்லது தொற்று காரணமாக கண்ணின் ஒரு பகுதியான கான்ஜூன்டிவா வீக்கமடையும்போது இந்த நோய் ஏற்படுகிறது.

முதலில் ஒரு கண்ணில் இந்த பிரச்சனை தோன்றி, மற்றொரு கண்ணுக்கும் பரவலாம். இந்த மெட்ராஸ் ஐ பிரச்சனை பெரும்பாலும் சிறுவர்களுக்கு ஏற்படும். மேலும், இளம் வயதினருக்கும், பெரியவர்களுக்கும் அவ்வப்போது பாதிப்பை தரும். மெட்ராஸ் ஐ பொதுவாக 4 வகைப்படும். அவை வைரஸ் மெட்ராஸ் ஐ, பாக்டீரியா மெட்ராஸ் ஐ, ஒவ்வாமை மெட்ராஸ் ஐ, இரசாயன மெட்ராஸ் ஐ, பாப்பில்லரி மெட்ராஸ் ஐ ஆகும்.

வைரஸ் மெட்ராஸ் ஐ : இவை பொதுவான வகை வைரஸால் ஏற்படுகிறது. இந்த தொற்றானது வைரஸால் மாசுபட்ட மேற்பரப்புகளை தொடுவதன் மூலமும், பாதிக்கப்பட்ட நபரை தொடர்பு கொள்வதன் மூலமும் ஏற்படுகிறது. இதற்கென்று குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் கிடையாது. பொதுவாக 1 முதல் 3 வாரங்களுக்குள் தானாகவே சரியாகிவிடும்.

பாக்டீரியல் மெட்ராஸ் ஐ : பாக்டீரியல் கான்ஜூன்க்டிவிடிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இதனால் பாதிப்பு ஏற்படும்போது கண்கள் சிவந்து நீர் வடியும். தொடர்ந்து, கண்களில் அரிப்பு ஏற்படும். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபரிடம் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவதாலேயோ பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும், இதற்கு ஆண்டிபயாடிக் கண் சொட்டு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இரசாயன மெட்ராஸ் ஐ : நீச்சல் குளத்தின் குளோரின் தண்ணீர், தரை கிளீனர்களில் இருந்து வெளிப்படும் புகை கண்களில் படும்போது இவை ஏற்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், கண்களை உடனடியாக தண்ணீரில் கழுவி, மருத்துவரை அணுக வேண்டும். இரசாயங்கள் கண்களுக்கு அதிக தீங்கை விளைவிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வாமை மெட்ராஸ் ஐ : ஒவ்வாமை மெட்ராஸ் ஐ பெரும்பாலும் செல்லப்பிராணிகளின் தோல் அல்லது பூச்சிகளின் மூலம் மெட்ராஸ் ஐ ஏற்படுகிறது. இதனால், கடுமையான கண்களில் அரிப்பு, சிவத்தல் போன்றவை ஏற்படும். இதற்கு ஆண்டிஹிஸ்டமைன் கண் சொட்டு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பாப்பில்லரி மெட்ராஸ் ஐ : பாப்பில்லரி மெட்ராஸ் ஐ என்பது காண்டாக்ட் லென்ஸ்கள், கண் ப்ரோஸ்தெடிக்ஸ் போன்றவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. காண்டாக்ட் லென்ஸ் அணியும்போது கண்களில் அரிப்பு, சிவத்தல் மற்றும் உருத்தல் இருந்தால் அதை அகற்றவது நல்லது.

மெட்ராஸ் ஐ வராமல் தடுக்க என்ன செய்யலாம்..?

* வெளியே சென்று வந்தவுடன், பாதிக்கப்பட்ட நபரை தொட்டவுடன் உடனடியாக கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

* கண்கள் சிவக்கும்போது கண்களை தொடுதல் அல்லது தேய்த்தல் போன்றவை செய்யாமல், ஒரு காட்டன் துணியில் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.

* வீட்டில் யாருக்காவது மெட்ராஸ் ஐ பாதிப்புகள் இருந்தால், அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

* குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பள்ளிகளுக்கும், வெளியேவும் செல்ல அனுமதிக்க வேண்டாம்.

* ஒரு கண்ணில் பாதிப்பு இல்லையென்றால், இரண்டு கண்களுக்கும் ஒரே கண் சொட்டு மருந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Read More : ”என்னை வெற்றி பெற வைத்தால் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம்”..!! கவனம் ஈர்த்த வேட்பாளரின் வாக்குறுதி..!!

Tags :
madras eyeகண்கள்சிவப்புமெட்ராஸ் ஐ
Advertisement
Next Article