மெட்ராஸ் தினம்..!! தமிழ்நாடு அரசின் ரீல்ஸ் போட்டியில் பங்கேற்க இதுதான் விதிமுறை..!! ரூ.10,000 பரிசை வெல்ல இதை பண்ணுங்க..!!
ஆகஸ்ட் 22ஆம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 'ரீல்ஸ்' போட்டி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் அருங்காட்சியத்துறை திட்டமிட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த போட்டியில் முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,500, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரீல்ஸ் போட்டியின் விதிமுறைகளை பொறுத்தவரை, ஒருவர் இரண்டு ரிலீஸ் வரை போஸ்ட் செய்யலாம். ஒவ்வொரு ரீல்ஸும் 30 முதல் 90 வினாடிகளுக்குள் இருக்க வேண்டும். இந்த ரீல்ஸ்கள் மெட்ராஸின் பெருமைகளையும், வாழ்வியலையும் எடுத்துரைக்கும் வகையில் இருக்க வேண்டும். கலாச்சாரம், கட்டடம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அம்சத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்க வேண்டும்.
சென்னை அருங்காட்சியகத்தின் அழகியலை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கலாம். ஒரிஜினலாகவும், புதிதாகவும் உருவாகப்பட்ட ரீல்ஸ்களாக இருக்க வேண்டும். எந்தவொரு போட்டியிலும் இதற்கு முன்னர் பயன்படுத்தியிருக்கக் கூடாது. இந்த ரீல்ஸ்களை ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை மட்டுமே பதிவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் ரீல்ஸ் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தாங்கள் எடுக்கக்கூடிய ரீல்ஸ்களை பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, தமிழ்நாடு அருங்காட்சியகத்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தை கொலாபுரேட் செய்ய இன்வைட் பண்ண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : மக்களே…! இன்று முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை… வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு…!