For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"நான் ரெடி நீங்க ரெடியா.?" நூதன முறையில் வரன் தேடும் இளைஞர்.!

06:17 PM Feb 19, 2024 IST | 1newsnationuser7
 நான் ரெடி நீங்க ரெடியா    நூதன முறையில் வரன் தேடும் இளைஞர்
Advertisement

தற்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பெண் தேடுவதற்கு என மேட்ரிமோனி இணையதளங்கள் வாட்ஸ்அப் மற்றும் முகநூல் குழுக்கள் போன்றவை வந்துவிட்டன. இத்தனை வசதிகள் இருந்தும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் விசித்திரமான பின் தேடும் படலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது

Advertisement

மத்திய பிரதேசம் மாநிலத்தின் தமோ நகரில் வசித்து வரும் தீபேந்திர ரத்தோர் என்ற 29 வயது இளைஞர்தான் இந்த நூதனமான பெண் தேடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். பல வழிகளில் பெண் தேடியும் திருமணத்திற்கு பெண் அமையாததால் புதுமையான வகையில் தனது பெண் தேடும் படலத்தை தொடங்கி இருக்கிறார் இந்த இளைஞர். இவர் தனக்குப் பின் தேடுவதற்காக தனது புகைப்படம் பிறந்த தேதி நேரம் கல்வி தகுதி உடல் எடை உயரம் தொழில் மற்றும் ரத்தப் பிரிவு போன்றவை அடங்கி பயோடேட்டாவை விளம்பரப் பேனராக தயார் செய்து தனது ஆட்டோவில் வைத்திருக்கிறார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது " எனக்கு திருமணம் செய்ய வேண்டும். எனது பெற்றோர்கள் கடவுள் வழிபாட்டில் மும்முறமாக இருக்கின்றனர். எனக்கு பெண்பார்ப்பதற்கு அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. பக்தி என்பது அவர்களது ஆர்வம் அதில் நான் தலையிட விரும்பவில்லை. எனக்கு திருமணம் செய்ய ஆசை இருப்பதால் நானே பெண் பார்க்க துவங்கி விட்டேன். இது தொடர்பாக ஒரு குழுவில் இணைந்தேன் அங்கு பலன் கிடைக்கவில்லை. அதனால் இந்தப் புது முயற்சியில் இறங்கி இருக்கிறேன் என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தனது ஊர் மட்டுமல்ல பக்கத்து ஊரில் இருக்கும் பெண்கள் கூட தாராளமாக திருமணம் செய்ய தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார். ஜாதி மத பாகுபாடுகள் தடையில்லை எனக் கூறும் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை எந்தவித கஷ்டமும் இல்லாமல் நல்லபடியாக வைத்துக் காப்பாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நூதனமான விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது . ஆனால் அந்த இளைஞருக்கு இன்னும் பெண் தான் கிடைக்கவில்லை.

English Summary: An autorickshaw driver from Madhya Pradesh searching for his bride in a unique way by created his bio data as an advertise banner and display it in his Auto.

Tags :
Advertisement