மாஸ் காட்டிய ’மதகஜராஜா’..!! வாழ வைத்ததா ’வணங்கான்’..? பாலாவை பின்னுக்குத் தள்ளிய சுந்தர் சி..!! இதோ வசூல் வேட்டை நிலவரம்..!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள மதகஜராஜா மற்றும் வணங்கான் திரைப்படங்களின் வசூல் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
மதகஜராஜா
சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. மேலும், படம் பார்த்த ரசிகர்களும் 12 வருஷ பழைய படம் போல தெரியவில்லை. போரடிக்காமல் சிரிக்க வைத்து அனுப்புவதாக பாராட்டியுள்ளனர். இதனால், படத்தின் வசூல் முதல் நாளே பிக்கப் ஆகிவிட்டது. இந்நிலையில், விஷாலின் மத கஜ ராஜா படம் முதல் நாளில் சிறப்பான ஓபனிங்கை பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி இந்த பொங்கல் வின்னர் ’மத கஜ ராஜா’ தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே, சமீபத்தில் விஷாலின் உடல்நலம் குறித்து ஆளுக்கொரு கருத்துக்களை யூடியூபில் பேசி விமர்சித்து வந்தனர். இந்நிலையில், தனக்கு இருந்தது வெறும் வைரல் ஃபீவர் தான். அன்றைய தினம் எங்கும் போக வேண்டாம் என வீட்டில் சொல்லியும், சுந்தர் சாருக்காக மட்டுமே வந்தேன். நண்டு சிண்டுகளுக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் வீழ்வேன் என நினைக்காதீர்கள் என விஷால் பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில், மத கஜ ராஜா படம் முதல் நாளில் அதிகபட்சமாக 3.2 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வணங்கான் :
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் முதல் நாளில் 95 லட்சம் ரூபாயும், 2ஆம் நாளில் 1.15 கோடி ரூபாயும், நேற்று 1 கோடி ரூபாயும் என மொத்தமாக இதுவரை ரூ.3.05 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் முதல் நாளே இந்த பொங்கல் ரேஸில் வணங்கானை மத கஜ ராஜா பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்நிலையில், ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை மற்றும் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள நேசிப்பாயா ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது. அந்த படங்களின் வசூல் நிலவரத்தை பொறுத்து தான் பொங்கல் வின்னர் யார் என்பதை முடிவு செய்ய முடியும்.