For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆதார் விவரங்களை mAadhaar செயலியில் இணைப்பது எப்படி..? - முழு விவரம் இதோ..

mAadhaar, an official mobile application developed by UIDAI, is better than Aadhaar card. People can add their family members to this mAadhaar app.
08:00 AM Sep 02, 2024 IST | Mari Thangam
ஆதார் விவரங்களை maadhaar செயலியில் இணைப்பது எப்படி      முழு விவரம் இதோ
Advertisement

UIDAI அமைப்பால் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் அப்ளிகேஷனான எம்ஆதார் (mAadhaar) ஆதார் கார்டைவிட சிறந்ததாகும். மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை இந்த எம்ஆதார் ஆப்பில் இணைத்துக் கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட மொபைலை ஆதாருடன் இணைத்திருந்தால் மட்டுமே இந்த ஆப்பில் ஆதார் புரொபைலை உருவாக்க முடியும். எம்ஆதார் புரொபைலை செல்லத்தக்க ஐடி புரூப் ஆகவும், இகேஒய்சி அல்லது க்யூஆர் கோடு சர்வீஸ் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களை அறிந்து கொள்ளவும் உதவும்.

Advertisement

எம்ஆதார் ஆப் ஆதார் எண் வைத்திருப்பவர்களின் சுயவிவரங்களான பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, புகைப்படம் விவரங்களை அறிய உதவும். இந்த செயலியில் அதிகபட்சம் 3 குடும்ப உறுப்பினர்களை அவர்களது ஆதாரில் சேர்க்கப்பட்ட அதே மொபைல் போன் விவரங்களுடன் இணைக்கலாம்.

  • உங்களது ஸ்மார்போனில் உள்ள எம்ஆதார் செயலியை திறந்து கொள்ளுங்கள்.
  • அதில் “Add Profile” என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • பின்னர், உங்களது குடும்ப உறுப்பினரின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்யுங்கள்.
  • விவரங்களை சரிபார்த்த பின், விதிகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
  • உங்களது குடும்ப உறுப்பினருக்கு ஒரு ஓடிபி அவரது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்து சேரும்.
  • அந்த ஓடிபியை ஆப்பில் டைப் செய்யுங்கள்.
  • விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் குடும்ப உறுப்பினரின் விவரங்கள் உங்களது செயலியில் சேர்ந்துவிடும். குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை உங்களது எம்ஆதார் ஆப்பில் வெற்றிகரமாக சேர்த்துவிட்டால் நீங்கள் அவர்களது ஆதார் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
  • இ-கேஒய்சி, லாக்/அன்லாக் ஆதார் மற்றும் பிற அம்சங்களை அவர்களுக்காக நீங்கள் ஒரு பின் நம்பர் மூலம் பயன்படுத்தலாம்.

Read more ; 22 பேருடன் காணாமல் போன ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்து…! 17 பேரின் உடல்கள் மீட்ப்பு..!

Tags :
Advertisement