For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

INDIAN 2 | 'மீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தா'… தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லைக்கா வெளியிட்ட மாஸ் அப்டேட்.!!

02:41 PM Apr 14, 2024 IST | Mohisha
indian 2    மீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தா … தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லைக்கா வெளியிட்ட மாஸ் அப்டேட்
Advertisement

INDIAN 2: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லைக்கா நிறுவனம் உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

Advertisement

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியன் 2(INDIAN 2) திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. கொரோனா பெருந் தொற்று மற்றும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து போன்ற காரணங்களால் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசன் சமுத்திரக்கனி சித்தார்த் காஜல் அகர்வால் பிரியா பவானி சங்கர் ராகுல் பிரீத் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறது .

மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரைப்படத்தின் புதிய போஸ்டரை லைக்கா நிறுவனம் தனது X தளத்தில் வெளியிட்டது. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் போஸ்டர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே வைரலாகி இருக்கிறது.

Read More: CANADA | 24 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொலை.!! காரில் நடந்தேறிய கொடூரம்.!! குடும்பத்தார் உருக்கமான வேண்டுகோள்.!!

Tags :
Advertisement