For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறையில் சொகுசு வசதி..!! வேறு சிறைக்கு மாற்றப்பட்ட பிரபல நடிகர் தர்ஷன்..!!

Actor Darshan, who was lodged in Bengaluru Central Jail, has been shifted to Bellary Jail.
11:18 AM Aug 29, 2024 IST | Chella
சிறையில் சொகுசு வசதி     வேறு சிறைக்கு மாற்றப்பட்ட பிரபல நடிகர் தர்ஷன்
Advertisement

பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.

Advertisement

தனது பெண் தோழிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதால், தன்னுடைய ரசிகரான ரேணுகா சாமியை கடத்திக் கொலை செய்ததாக, பிரபல கன்னட நடிகர் தர்ஷன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷனுக்கு, சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

மேலும், சிறைக்குள் தர்ஷன் புகைப்பிடிக்கும் படம் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து வீடியோ கால் பேசும் வீடியோவும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் சிறை காவலர்கள் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது தொடர்பாக விசாரிக்க 3 தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் இருக்கும் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற 24-வது கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகஸ்ட் 27ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் வட கர்நாடகாவில் உள்ள பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.

Read More : இந்த 3 ராசிக்காரர்களும் ராஜயோகம்..!! 200 வருடங்களுக்கு பிறகு நடக்கப்போகும் மாற்றம்..!! இனி பண மழை தான்..!!

Tags :
Advertisement