முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காதல் என்ற பெயரில் காம லீலைகள்..!! பல பெண்களை ஏமாற்றி பலாத்காரம்..!! இளைஞருக்கு தாயே உடந்தை..!! பரபரப்பு சம்பவம்..!!

The incident of the arrest of a young man who took intimate photos with women he met in the name of love and used them to rape has caused a sensation.
08:26 AM May 28, 2024 IST | Chella
Advertisement

காதல் என்ற பெயரில் பழகிய பெண்களுடன் நெருங்கிய புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்து பாலியல் பலாத்கார வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள ஷிராசியைச் சேர்ந்தவர் அருணா கவுடா மலாலி என்ற அர்ஜுன். இவர் இளம்பெண்களை குறிவைத்து காதல் வலையில் சிக்கவைத்து அவர்களுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களைக் காட்டி அவர்களை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்நிலையில், அர்ஜுன் மீது ஷிராசி, பனவாசி, குந்தாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிரட்டல், இளம்பெண்களை பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், அர்ஜூனை கைது செய்ய போலீஸார் சென்றனர்.

அப்போது அவர் திடீரென கற்களை வீசி தாக்கியுள்ளார். ஆனால், போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருக்கு உறுதுணையாக இருந்த பாலச்சந்திரா, கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயன்றார். உடனடியாக அவரை மீட்ட போலீஸார், ஹூப்ளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 போலீஸாரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அர்ஜுன் மீது ஷிர்சி கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்," குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுனுக்கு அவரது தாய் நாகவேணி உதவியுள்ளார். தன்னை நம்பும் பல பெண்களின் அந்தரங்கப் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதாக அர்ஜுன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரின் பாலியல் நடவடிக்கைக்கு பாலச்சந்திர கவுடா என்ற அவரது உறவினர் ஆதரவு அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சில பெண்களிடம் நாகவேணி பணம் வசூலித்துள்ளதும் தெரியவந்தது. தலைமறைவாகியுள்ள அவரைத் தேடி வருகிறோம்" என்றனர்.

Read More : உஷார்..!! பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பல கோடி மோசடி..!! தமிழக அதிகாரிகள் மீது பாய்ந்தது வழக்கு..!!

Tags :
“child sexual abuse”abusebrooklyn sexual abusechild abusechild on child sexual abusechild sexual abusepreventing child sexual abuserecognising child sexual abusesexual abusesexual abuse (crime type)sexual abuse childsexual abuse healingsexual abuse in relationshipssexual abuse survivorssexual abuse treatmentsexual assaultsibling sexual abusesurviving sexual abusevictims of sexual abuse
Advertisement
Next Article