இன்று 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சந்திர கிரகணம்..! நிகழும் நேரம்..! இந்தியாவில் பாதிப்பு இருக்குமா..!
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று (செப்டம்பர் 18 ஆம் தேதி) நிகழவுள்ளது. இந்த கிரகணம் பௌர்ணமி நாளில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திர கிரகணம் காலை 06:11 மணிக்கு தொடங்கி காலை 10.17 மணிக்கு முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் மொத்தம் 4 மணி நேரம் 6 நிமிடங்கள் நீடிக்கும்.
இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25, 2024 அன்று நிகழ்ந்தது. அந்த முதல் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. அதே போல் இன்று நடக்கவுள்ள இரண்டாவது சந்திரா கிரகணத்தை இந்தியாவில் பல பகுதிகளில் காணமுடியாது. இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும், இந்த கிரகணத்தை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் மட்டுமே காண முடியும். குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் பெனும்பிரல் கட்டம் மட்டுமே தெரியும்.
பொதுவாக சந்திர கிரகணத்தின் தாக்கம் கிரகணத்திற்கு 9 மணி நேரத்திற்கு முன்பே தொடங்கும். ஆனால் இன்று நடக்கவிருக்கும் கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் இது பொருந்தாது. இன்று நிகழ இருக்கும் சந்திர கிரகண கன்னி ராசியில் கேது-சூரியன் மற்றும் மீன ராசியில் ராகுவுடன் சந்திரன் இணையும் நாளில் ஏற்படும் இந்த சந்திர கிரகணம் 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். எப்போதும் ராகுவுடன் சந்திரன் இணையும் சமயத்தில், நேரெதிரில் சூரியன் வரும் போது உண்டாகும் பௌர்ணமி நாளில் தான் சந்திர கிரகணம் நிகழும். மீண்டும் மீன ராசியில் சந்திர கிரகணம் ஏற்பட 18 ஆண்டுகள் ஆகும்.
சந்திரகிரகணம் முடிந்தவுடன் வெள்ளைப் பொருட்களை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசுப பலன்கள் குறையும். கிரகணம் முடிந்த பிறகு வீட்டை சுத்தம் செய்து விட்டு, குளித்து விட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாட்டினை மேற்கொள்ளலாம். திதி, தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை 10.20 மணிக்கு பிறகு கொடுக்கலாம். இன்று புதன்கிழமை என்பதால் பகல் 12 மணி முதல் 01.30 மணி வரை ராகு கால நேரமாகும். பொதுவாக உச்சி பொழுதிற்கு பிறகு பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக் கூடாது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால் காலை10.30 மணிக்கு பிறகு, பகல் 12 மணிக்கு முன்பாக பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மகாளய பட்ச விரத்தை துவங்கலாம்.