For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரஜினியை Rolls-Royce காரில் அமரவைத்து அமீரகத்தை சுற்றிக்காட்டிய லு லு நிறுவன தலைவர்..!! வைரல் வீடியோ..!!

08:40 AM May 22, 2024 IST | Chella
ரஜினியை rolls royce காரில் அமரவைத்து அமீரகத்தை சுற்றிக்காட்டிய லு லு நிறுவன தலைவர்     வைரல் வீடியோ
Advertisement

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெய்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது அடுத்த பட பணிகளை தொடங்கியுள்ளார். அந்த வகையில், "ஜெய் பீம்" படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் "வேட்டையன்" என்கின்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள "கூலி" என்கின்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

Advertisement

இந்நிலையில், இடைப்பட்ட நாட்களில் ஓய்வெடுக்க அவர் அண்மையில் அமீரகம் சென்றிருந்தார். அங்கே அவர் பிரபல லு லு நிறுவனத்தின் தலைவர் யூசுப் அலியை சந்தித்து உரையாடினார். அமீரகத்தில் உள்ள பல முக்கிய தொழிலதிபர்களை ரஜினிகாந்த் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும், லு லு நிறுவன தலைவர் யூசுப் அலி, தனது மிரளவைக்கும் வெள்ளை rolls-royce காரில் சூப்பர் ஸ்டாரை அருகில் அமர வைத்து, அவரே அந்த வாகனத்தை ஓட்டிச் சென்று அவருக்கு அமீரகத்தில் சில இடங்களை சுற்றி காட்டியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அரபு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே வர்த்தகத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றும் நபரான யூசுப் அலி, ரஜினிகாந்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Read More : MDH & Everest மசாலாக்களை பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா..? இந்திய மக்களுக்கு FSSAI கூறுவது என்ன..?

Advertisement